மியான்மரில் நன்னடத்தை காரணமாக 6,966 கைதிகளுக்கு வியாழக்கிழமை பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
விடுவிக்கப்பட்டவர்களில் 155 சீனர்கள் உள்ளிட்ட 210 வெளிநாட்டவர் அடங்குவர்.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
அரசை எதிர்ப்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அதிபர் தெய்ன் செய்ன் தலைமையில் அமைந்துள்ள தற்போதைய அரசு, பல ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏராளமான சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், “நன்னடத்தை’ காரணமாக 6,966 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அதிபர் தெய்ன் செய்ன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
1