செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் தவிப்பு பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் தவிப்பு

பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் தவிப்பு பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் தவிப்பு

0 minutes read

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

எதிர்வரும் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும்.

ஆனாலும், சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ருவிட்டர், முகநூல் வழியான பரப்புரைகள், எதிர்வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் தேர்தல் சட்டங்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், பரப்புரைக் காலம் முடிந்த பின்னரும், இணையவழிப் பரப்புரைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.