செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டி வசூலித்த படங்களின் பட்டியல்தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டி வசூலித்த படங்களின் பட்டியல்

தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டி வசூலித்த படங்களின் பட்டியல்தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டி வசூலித்த படங்களின் பட்டியல்

2 minutes read

 

சமீபகாலமாக தமிழ் திரைப்படங்கள், ஹிந்தி திரைபடங்களின் வசூலை முறியடித்து வருகின்றன. அந்த வகையில் 100 கோடி வசூலில் இடம் பெற்ற தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த திரைப்படமே முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த 100 கோடி பட்டியலில் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் மற்றும் பிரபாஸ் போன்ற நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களே தட்டிச் செல்கின்றன.

தமிழ் திரைப்படங்களின் முதல் 100 கோடி திரைப்படம் என்ற பெருமையை சிவாஜி திரைப்படம் தட்டிச் சென்றது. ரஜினி – ஸ்ரேயா நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த இந்தப் படம் உலகமெங்கும் சுமார் 148 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா போன்ற பிரபலங்களின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் 24 நாட்களில் 500 கோடியை வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான அனைத்துத் திரைப்படங்களின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி. இந்திய அளவில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் 4 வது இடத்தில் உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் உலகளவில் சுமார் 283 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. இந்திரன் படத்தை சன் குழுமம் தயாரித்து வெளியிட்டது.

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் – ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகளவில் சுமார் 239 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது.

படம் வெளிவருவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட விஸ்வரூபம் உலகமெங்கும் சுமார் 220 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. கமல் நடித்து இயக்கித் தயாரித்து வெளியிட்ட விஸ்வரூபம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வித்தியாசமான தோற்றங்களில் கமல் நடிப்பில் வெளிவந்த அறிவியல் கலந்த அதிரடித் திரைப்படமான தசாவதாரம் இரண்டாவது 100 கோடி திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. கமலுக்கு ஜோடியாக அசின் மற்றும் மல்லிகா ஷெராவத் இருவரும் நடித்திருந்தனர்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினியின் திரையுலக மறு பிரவேசத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த படமான லிங்கா உலகம் முழுவதும் சுமார் 154 ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி ஜீவானந்தம், கதிரேசன் என 2 வேடங்களில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படம் சுமார் 128 கோடியை உலகம் முழுவதும் வசூலித்தது. திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து வெளியிட்டது.

இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளிவந்த முதல் 100 கோடி படம் என்ற பட்டியலில் இணைந்தது ஆரம்பம் திரைப்படம். அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி மற்றும் ராணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம், உலகம் முழுவதும் சுமார் 124 கோடியை வசூலித்தது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி 100 கோடி படம் என்ற பட்டியலில் இணைந்தது. திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, கலைப்புலி தாணு தயாரித்த துப்பாக்கியை ஜெமினி சர்கியூட் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. உலகம் முழுவதும் சுமார் 121 கோடியை வசூலித்தது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த காஞ்சனா -2 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. நித்யாமேனன், டாப்ஸி என 2 ஹீரோயின்களுடன் பேயை நம்பிப் படமெடுத்த லாரான்சிற்கு மாபெரும் வசூலை தந்தது.

நன்றி : தினமணி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.