செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தூங்காவனம்’கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தூங்காவனம்’

கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தூங்காவனம்’கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தூங்காவனம்’

1 minutes read

‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தூங்காவனம்’. இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கியிருக்கிறார். திரைக்கதையை கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் நடைபெற்றது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகியிருக்கிறது. தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நடந்தது.

ஜிப்ரான் இசையில், வைரமுத்துவின் பாடல் வரிகளில், கமல்ஹாசன் பாடிய பாடலின் உருவாக்கத்துடன் படப்படிப்பை முடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.