செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை “கூகுள்” நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வுதமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை “கூகுள்” நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வு

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை “கூகுள்” நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வுதமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை “கூகுள்” நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வு

2 minutes read

வலைதள சேவையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள “கூகுள்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (43) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை “கூகுள்’ நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும், நிறுவனருமான லேரி பேஜ் வெளியிட்டார். “கூகுள்’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சென்னையில் பிறந்து பள்ளிக் கல்வியை முடித்த சுந்தர் பிச்சை, மேற்கு வங்கத்தின் கராக்பூரில் உள்ள இந்திய தொழில்கல்வி நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். அதன் பிறகு, ஜெர்மனியில் உள்ள ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பொறியியல் பயின்ற அவர், அமெரிக்காவிலுள்ள வார்ட்டன் மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு “கூகுள்’ நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்க மேலாண்மைத் துறையின் துணைத் தலைவராக சுந்தர் பிச்சை சேர்ந்தார்.
வலைதளப் பயன்பாட்டுக்கான “கூகுள் குரோம்’ மென்பொருளை வடிவமைப்பதில் சுந்தர் பிச்சை முக்கியப் பங்கு வகித்துள்ளார். வலைதளத் தேடுதலுக்காக தற்போது பல்வேறு மென்பொருள்கள் இருந்தாலும், “கூகுள்’ நிறுவனத்தின் தயாரிப்பான குரோம் மென்பொருளே உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2008-ஆம் ஆண்டு “கூகுள் குரோம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் வலைதளப் பயன்பாட்டாளர்களில் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே அந்த மென்பொருளை பயன்படுத்தினர். தற்போது அதன் பயன்பாட்டு அளவு, 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
அதேபோல, “கூகுள் ஆபரேட்டிங் சிஸ்டம்’ உள்பட அந்நிறுவனத்தின் பல்வேறு புதிய மென்பொருள்கள்கள், செல்லிடப்பேசி செயலிகள் சுந்தர் பிச்சையின் தலைமையில் உருவாக்கப்பட்டவை.
அந்த மென்பொருள்களும், செயலிகளும் வலைதளப் பயன்பாட்டாளர்களை அதிகம் ஈர்த்துள்ளன. “கூகுள்’ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த 11 ஆண்டுகளில் அவர் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் லேரி பேஜ், “சுந்தர் பிச்சையின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க இது அவருக்கு சரியான நேரம்’ என்று தெரிவித்துள்ளார்.
“ஆல்பாபெட்’ என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளோம்; அந்த நிறுவனத்தின் கீழ் துணை நிறுவனமாக இனி “கூகுள்’ இயங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
“மைக்ரோசாஃப்ட்’ தலைவர் சத்யா நாதெல்லா, “பெப்சி’ தலைவர் இந்திரா நூயி, “மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் தலைவர் அஜய் பங்கா, “சேன்டிஸ்க்’ நிறுவனத் தலைவர் சஞ்சய் மல்கோத்ரா உள்பட பல இந்தியர்கள், சர்வதேச பெருநிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “கூகுள்’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது என சுட்டுரையில் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
“மைக்ரோசாஃப்ட்’ தலைவர் சத்யா நாதெல்லா, “கூகுள்’ செயல் தலைவர் எரிக் ஸ்மித் உள்பட சர்வதேச முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் பலரும் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
“நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட அமெரிக்கப் பத்திரிகைகளும் சுந்தர் பிச்சையைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. “நாஸ்காம்’ உள்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும், வல்லுநர்களும் தங்களது வாழ்த்துகளை சுந்தர் பிச்சைக்குத் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.