செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சீன கரன்சி மதிப்பு இரண்டாவது நாளாக குறைப்புசீன கரன்சி மதிப்பு இரண்டாவது நாளாக குறைப்பு

சீன கரன்சி மதிப்பு இரண்டாவது நாளாக குறைப்புசீன கரன்சி மதிப்பு இரண்டாவது நாளாக குறைப்பு

1 minutes read

இரண்டாவது நாளாக தனது நாட்டின் கரன்சி மதிப்பை சீன அரசு குறைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதையும், ஏற்றுமதி மதிப்பு குறைந்து வருவதையும் சரிக்கட்ட சீன அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால், பிற நாடுகளும் இந்தப் போட்டியில் குதிக்கும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சம் உலகச் சந்தையில் உருவாகியுள்ளது.
உலகப் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததைத் தொடர்ந்து, சீனாவின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, நாட்டின் கரன்சியான யுவானின் மதிப்பைக் குறைக்க சீன அரசு செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான யுவான் மதிப்பு 2 சதவீதம் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், யுவான் மதிப்பில் மேலும் 1,008 அடிப்படைப் புள்ளிகள் புதன்கிழமை குறைக்கப்பட்டன.
இதனால் டாலருக்கு நிகரான அதன் மதிப்பு மேலும். 1.6 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
ஏற்றுமதிகளைப் பெருமளவில் நம்பி சீனப் பொருளாதாரம் உள்ள நிலையில், இந்த முடிவு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
யுவான் மதிப்பு குறைவதால், வெளிநாடுகளில் சீனப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் வாய்ப்பு தோன்றியுள்ளது.
இதனால், சீனாவுடன் தொழில்போட்டியில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், அவையும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.