செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எகிப்து நாட்டில் ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | கலவர வழக்கில் 253 பேருக்கு வாழ்நாள் சிறைஎகிப்து நாட்டில் ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | கலவர வழக்கில் 253 பேருக்கு வாழ்நாள் சிறை

எகிப்து நாட்டில் ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | கலவர வழக்கில் 253 பேருக்கு வாழ்நாள் சிறைஎகிப்து நாட்டில் ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | கலவர வழக்கில் 253 பேருக்கு வாழ்நாள் சிறை

1 minutes read

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி. எகிப்து வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர்தான். ஆனால் அதிகார குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தினர்.

இதன் விளைவாக மோர்சி, கடந்த 2013–ம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ராணுவ தளபதியாக இருந்த அப்துல் பட்டா எல் சிசி அதிபர் ஆனார்.

மோர்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து பெஹைரா நகரில் பெருமளவு கலவரங்கள் நடந்தன. இந்த கலவரத்தின்போது, போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. பலர் கொலையும் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக 506 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அலெக்சாண்டிரியா ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தியது.

முடிவில், 253 தலைமறைவு குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 54 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

199 பேருக்கு தலா 3 முதல் 15 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.