“நாட்டை, உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் மலையகத் தமிழன் என்று சொல்லுங்கள். தடை செய்யப்பட்ட வார்த்தைப் பிரயோகம் வேண்டாம்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை நோக்கிக் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைச் சரிதம் என்ற அடிப்படையில் வெளிவர உள்ள முன்னோட்ட காணொளியில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் மனோ எம்.பி. மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட ட்ரேலரில் பயன்படுத்த வேண்டாம். அந்த வார்த்தையை நானே நேரடியாகத் தடை செய்து காட்டியுள்ளேன்.
கதையம்சத்துக்குத் தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது தெரியும்.
அந்த இடத்தில் “நாட்டைத் திரும்பிபி பார்க்க வைத்த மலையகத் தமிழன்” என்று போடுங்கள். சரியாக வரும்.” – என்று மனோ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.