நீண்ட நாட்களாக நிலவிவந்த பல வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ என அறிவித்துள்ளது கூகுள்.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1), கிட்காட் (4.4), லாலிபப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள்.
உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது. பல கருவிகளில் பழைய வெர்ஷன்கள் இருந்தாலும், அப்கிரேட் செய்ய முடியாத நிலை இருந்தாலும் இன்றளவும் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது ஆண்ட்ராய்டு மட்டுமே.