செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நீதிபதி இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்நீதிபதி இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்

நீதிபதி இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்நீதிபதி இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார்

1 minutes read

சென்னை ஐகோர்ட்டில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தென்னிந்திய திரைப் படங்களில் கடந்த 1970–ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் தலைசிறந்த இசைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன். இதுவரை ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன். இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன்.

நான் இசையமைத்த திரைப்படம் மற்றும் பக்தி பாடல்களை ஒலிப்பரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால், அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3–வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப, கேசட்டில் விற்பனை செய்ய அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிக்கார்டிங் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.