செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 771 குர்து படையினர் ஒரு மாதத்தில் கொலை | துருக்கி 771 குர்து படையினர் ஒரு மாதத்தில் கொலை | துருக்கி

771 குர்து படையினர் ஒரு மாதத்தில் கொலை | துருக்கி 771 குர்து படையினர் ஒரு மாதத்தில் கொலை | துருக்கி

1 minutes read

துருக்கி ராணுவம், குர்து கிளர்ச்சிப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் 771 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

துருக்கி அரசு கடந்த ஒரு மாத காலத்தில் “தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று பலமுறை விமானப் படைத் தாக்குதல் நடத்தியிருந்தாலும், 3 முறை மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்கியது. மீதித் தாக்குதல்கள் அனைத்தையும் குர்து படையினரின் நிலைகள் மீது மட்டுமே மேற்கொண்டு வருகிறது.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்றழைக்கப்படும், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் ஈராக் நாட்டில் அமைத்துள்ள முகாம்கள் மீது துருக்கி விமானப் படை கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் சுமார் 430 குர்து படையினர் உயிரிழந்தனர்.

மேலும் தென்கிழக்கு துருக்கியில் உள்ள குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் மேற்கொண்ட தரை வழி தாக்குதலில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர் என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துருக்கி அரசு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்த்து தங்களைத் தாக்குவதாக குர்து படையினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.