தென் கொரியாவிலிருக்கும் ராணுவ முகாம் மீது வட கொரியா கடந்த வியாழக் கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது.
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் 1950-53ல் நடந்த யுத்தத்தில் அமைதி உடன்படிக்கை ஏதும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நடப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது.
இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் யொங் உண் போருக்கு தயாராகும் படி ராணுவத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து, வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில் வடகொரியாவின் இந்த நடவடிகை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.