செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகத் தமிழர் பேரவை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள்உலகத் தமிழர் பேரவை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள்

உலகத் தமிழர் பேரவை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள்உலகத் தமிழர் பேரவை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள்

1 minutes read

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் உள்ளனர் என்ற தெளிவான செய்தியை இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் புதிய அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறியிருக்கின்றன” என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெற்றிருக்கும் பாரிய வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குப் பேச்சுகள்மூலம் தீர்வொன்றைக் காண்பதற்கு தமிழ் மக்கள்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஆணை வழங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனேயே வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் நிற்கின்றார்கள் என்ற தெளிவான செய்தியொன்று புதிய அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களால் சொல்லப்பட்டுள்ளது.    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போன்று தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட விடயங்களில் ஐ.நா. பிரேரணை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் மேலும் காலதாமதப்படுத்தப்படாமல் தீர்க்கப்படவேண்டும் என்ற விடயங்களை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புலம்பெயர்ந்துவாழ் அமைப்பு என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நீண்டகாலமாக இணைந்துவேலை செய்வதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பேச்சுமூலம் தீர்வொன்றைக் காண்பதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவை எதிர்பார்த்துள்ளோம்.  ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான சாதகமான முற்போக்கான மாற்றத்தின் பின்னர் மற்றுமொருமுறை சாதகமான மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.