ஞானம் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் வரலாம்.
ஒரு துறவி இருந்தார் யார் எப்படி கோபப்படுத்தினாலும் அவருக்கு கோபமே வராது அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம் துறவி விளக்கினார். ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து. தியானம் செய்வது என் வழக்கம் . அப்படி ஒரு முறை தியானத்திலிருந்த போது தான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியதுஒரு படகு இப்படி அஜாக்கிரதை யாக முட்டவிட்டது யார்? என்று கோபமாக கண்களைத்திறந்து பார்த்தால் அது வெற்று படகு ? காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருகிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப்படைக்கிடம் காட்டி என்ன பயன்.
யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது இதுதான் நினைவுக்குவரும் இதுவும் வெற்றுப்படகு தான் என்று அமைதியாகி விடுவேன் ஞானம் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் வரலாம்.