செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன்

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன்

1 minutes read

தென்னிந்தியாவில் இருந்து சுதந்திர போராட்டத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்த மாவீரன் வீர பாண்டிய கட்டபொம்மன். தமிழகத்து கிராமங்களில் நாடகமாக நடத்தப்பட்டு வந்த வீரபாண்டிய கட்ட பொம்மனின் வரலாற்றை இயக்குனர் பி.ஆர்.பந்துலு திரைப்படமாக தயாரித்தார்.

1959–ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியானது. சிவாஜி இதில் வீரபாண்டிய கட்ட பொம்மனாக வீர வசனங்கள் பேசி நடித்து உலக அளவில் பாராட்டு பெற்றார். எகிப்து பட விழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாகவும், சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தது.

கட்டபொம்மனின் படை தளபதி வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன், தம்பி ஊமத்துரையாக ஓ.ஏ.கே.தேவர், வெள்ளையம்மாளாக பத்மினி, எட்டப்பனாக வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி ராகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாவர் சீதாராமன் ஜாக்சன் துரையாக நடித்து இருந்தார்.

1959–ம் ஆண்டு மே 10–ந்தேதி தமிழகத்தில் வெளியான அதே நாளில் லண்டனிலும் திரையிடப்பட்டது. சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் கதைக்கு ம.பொ.சிவஞானம் திரைக்கதை அமைத்து இருந்தார். ஜி.ராமநாதன் இசையில் இனிமையான பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது.

அந்தக்காலத்திலேயே போர்க்காட்சிகள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டு இருந்தது. பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு படத்தை தயாரித்து இயக்கினார். படம் வெளியான காலத்தில் தொடர்ந்து 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதே பெயரில் தெலுங்கிலும் அமர் ஷாகீத் என்ற பெயரில் இந்தியிலும் மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடப்பட்டது.

காலத்தால் அழியாத திரைக்காவியமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்த தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில் 70 எம்.எம். திரைப்படமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வண்ணக் கலரும், டி.டி.எஸ்.ஒலி கலவையுடன் வசனங்களும் இசையும் மாற்றம் பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.