செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும் | பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும் | பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும் | பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு கின்றன என்பதை அறிய முடியும் | பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

1 minutes read

அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய்கள் எவ்விதம் பரவு
கின்றன என்பதை அறிய முடியும்’ என தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்
கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆப்ரிக்க நாடான கென்யாவில் நோய் பரவல் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டனர்.கென்யாவில் 1.5 கோடி மக்களின் அலைபேசி தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அலைபேசியில் பேசப்பட்ட நேரம், எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நேரம், இச்சமயங்களில் அலைபேசி பயனாளர் இருந்த இடம் போன்றவை அலைபேசி கோபுர, ‘சிக்னல்’ மூலம் சேகரிக்கப்பட்டன.கடந்த 2008 ஜூன் முதல் 2009 ஜூன் வரை சேகரிக்கப்பட்ட 1,200 கோடி அலைபேசி தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.அலைபேசி உரிமையாளர்கள்
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எந்த நேரத்தில் செல்கின்றனர்; ஒரே இடத்தில் எப்போது இருக்கின்றனர் என்பன போன்றவை ஆராயப்பட்டன.

இத்தகவல்கள் கென்யாவில் ஆண்டிற்கு மூன்று முறை பரவலாகக் காணப்படும் ‘ருபெல்லா’ எனப்படும் தொற்று நோய் பரவும் காலம் தொடர்பான தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.ஆச்சரியப்படும் வகையில் அலைபேசி உரிமையாளர்கள் இடம் பெயர்தல் தொடர்பான தகவல்கள் அமைந்த விதமும் ருபெல்லா நோய் பரவிய காலம் மற்றும் பகுதி போன்ற தகவல்கள் அமைந்த விதமும் ஒரே மாதிரியாக இருந்தன.
கென்யாவில் ஒரு ஆண்டில், பிப்ரவரி, மே, செப்டம்பர் மாதங்களில் ருபெல்லாவின் தாக்கம் அதிகமாக இருந்ததை உணர்த்தும் வகையில் அலைபேசி தகவல்கள் அமைந்திருந்தன.

இதன் மூலம் அலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய் பரவல் நிகழும் பகுதிகள், காலம் போன்றவற்றை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அலைபேசி தகவல்களை வைத்து வேறு தொற்று நோய் பரவலை தீர்மானிக்க ஆய்வுகள் நடத்தப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.