செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வீட்டுக்காவல் முடிந்து மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்புவீட்டுக்காவல் முடிந்து மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு

வீட்டுக்காவல் முடிந்து மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்புவீட்டுக்காவல் முடிந்து மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு

1 minutes read

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷித்தின் வீட்டுக்காவல் முடிந்ததையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாலத்தீவு நாட்டின் அதிபராக பதவி வகித்தவர், முகமது நஷீத். இவர், தனது பதவி காலத்தில் நீதிபதி ஒருவரை கைது செய்ததாக கூறி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் அவர் மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 19 நாட்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நஷீத்துக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 8 வாரங்களுக்கு நஷீத்தை, வீட்டுக் காவலில் வைத்து சிகிச்சை அளிக்க கோர்ட்டு அனுமதித்தது. இந்த காலக்கெடு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. அப்போது, அவர் எஞ்சியுள்ள தண்டனைக் காலம் முழுவதையும் வீட்டுக்காவலில் கழிக்க அரசு அனுமதி அளிக்கும் என யூக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த விஷயத்தில் அரசு எந்த முடிவையும் எடுக்காத நிலையில், நேற்று அவருடைய வீட்டுக்காவலை நீக்கிய போலீசார், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.