செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவுதுப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவு

துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவுதுப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவு

1 minutes read

பிரான்ஸ் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்திய அயூப் எல் காஸ்ஸானி மீது அந்த நாட்டுக் காவல்துறையினர் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி “தாலிஸ்’ சர்வதேச நிறுவனத்தின் அதிவிரைவு ரயில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலில் ஏ.கே.47, கைத்துப்பாக்கி, கத்தி, ஏராளமான தோட்டாக்களுடன் அயூப் எல் காஸ்ஸானி (25) என்ற நபர், திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
அப்போது அங்கிருந்த ஸ்பென்ஸர் ஸ்டோன், அலெக் ஸ்கார்லடோஸ் (இருவரும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்), ஆன்டனி சாட்லர் ஆகிய 3 அமெரிக்கர்கள், கிரிஸ் நார்மன் என்ற பிரிட்டிஷார், பெயர் வெளியிட விரும்பாத பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் ஆகியோர் தாக்குதல் நிகழ்த்திய காஸ்ஸானியை மடக்கிப் பிடித்தனர்.
இதனால் மிகப் பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
தாக்குதல் நிகழ்ந்தபோது அந்த ரயிலில் 554 பயணிகள் இருந்தனர்.
காவலர்களால் கைது செய்யப்பட்ட காஸ்ஸானி, தான் ரயிலில் கொள்ளையடிக்கவே முயன்றதாகவும், பயணிகளைப் படுகொலை செய்யும் எண்ணத்துடன் ரயிலில் ஏறவில்லை எனவும் தெரிவித்தார்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த அவருக்கு மதப் பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் உளவுத் துறை அவரைக் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் காஸ்ஸானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.