இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா – துருக்கி நாடுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் கூறியதாவது:
இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகள் மீது ஒருங்கிணைந்து விமானத் தாக்குதல்கள் நிகழ்த்துவது குறித்து துருக்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
இன்னும் சில நாள்களில் இந்த ஒப்பந்தம் செயல்வடிவம் பெறும். நேட்டோ உறுப்பினரான துருக்கி, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகும். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரானப் போராட்டத்தில் எங்களது முக்கியக் கூட்டாளியாக துருக்கி திகழ்கிறது என்றார் அவர். ஏற்கெனவே, தங்கள் விமான தளத்திலிருந்து ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்த அமெரிக்க விமானங்களுக்கு துருக்கி அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
3