பிரான்ஸிடமிருந்து வியத்நாம் விடுதலை பெற்றதன் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, அந்த நாட்டுச் சிறையில் உள்ள 18,539 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வியத்நாம் அரசு அறிவித்துள்ளது.
வரும் திங்கள்கிழமை அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளில் 16 சீனர்கள், 6 மலேசியர்கள், 6 லாவோஸ் நாட்டவர், 2 ஆஸ்திரேலியர்கள் ஆகியோர் அடங்குவர்.
வியத்நாமில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை 63,000-க்கும் மேற்பட்ட கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0