செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய அமைச்சரவை பதவியேற்பு | இலங்கைபுதிய அமைச்சரவை பதவியேற்பு | இலங்கை

புதிய அமைச்சரவை பதவியேற்பு | இலங்கைபுதிய அமைச்சரவை பதவியேற்பு | இலங்கை

1 minutes read

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஒற்றுமை அரசின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றது.
இதுவரை எதிரெதிராகப் போட்டியிட்டு வந்த அந்த நாட்டின் இரு முக்கியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், முதல்முறையாக இந்த அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.
தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் 43 அமைச்சர்களுக்கு அதிபர் சிறீசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இலாக்காக்கள்: வெள்ளிக்கிழமை பதவியேற்ற 43 அமைச்சர்களில் 11 பேர் சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள்.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை இலங்கை அரசியல் சாசனப்படி அதிபரின் வசமிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியுடன், தேசியக் கொள்கை, பொருளாதார விவகாரங்கள் ஆகிய துறைகளின் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயல்பட இரு அணியினரும் சம்மதித்துள்ளதாக பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபர் சிறீசேனா தெரிவித்தார்.
முன்னதாக, இலாக்காக்களை ஒதுக்குவது தொடர்பாக ஐக்கிய சுதந்திர விடுதலை முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இரு தப்பினருக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் இலாக்காக்களை ஒதுக்குவதற்கு வசதியாக, 30 ஆக இருந்த அதிகபட்ச இலாக்காக்களின் எண்ணிக்கையை, 48-ஆக உயர்த்தி நாடாளுமன்றம் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.