செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்

இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்

1 minutes read

அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மூன்று பிரதிநிதிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 10 பேர் கொண்ட  அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் அரசியலமைப்பின் படி அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாகியுள்ளனர்.

அதேவேளை, அரசியலமைப்பு சபைக்கான தமது பிரதிநிதியாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்.

அதேவேளை,  சிறுகட்சிகளின் சார்பாக, ஜேவிபி தமது பிரதிநிதியாக  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு சபையின் 7 உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் கூட்டம், இன்று நடக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரின் நியமனம் தொடர்பாக ஆராயப்படும்.

ராதிகா குமாரசாமி, ஆரியரத்ன, ஓய்வுபெற்ற நீதியரசர் சலாம் ஆகியோர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சிவில் சமூகப் பிரதிநிதிகளின் நியமனத்தை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பு சபை செயற்பட ஆரம்பித்ததன் பின்னரே சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான தலைவர்களும் ஆணையாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.