நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டு காலம் நடந்து வந்த கடின முயற்சிகள், ஆலோசனைகளுக்கு பின்னர் இந்த அரசியல் சட்டம், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு நிறைவேறியது. மொத்தம் உள்ள 598 எம்.பி.க்களில் அரசியல் சட்டத்துக்கு ஆதரவாக 506 பேர் ஓட்டு போட்டனர்.
இந்த ஓட்டெடுப்பை சிறிய அளவிலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன. அரசியல் சட்டம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டதையொட்டி, நேபாளத்தில் 20, 21-ந் தேதிகளில் 2 நாள் பொதுவிடுமுறை விடப்படுகிறது.
நாளை மறுதினம் நடக்க உள்ள விழாவில் ஜனாதிபதி ராம்பரன் யாதவ், இதை முறைப்படி பிரகடனம் செய்வார். அதைத் தொடர்ந்து புதிய அரசியல் சட்டம் அமலுக்கு வரும். புதிய அரசிய