செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா காதலர் தின வெளியீடாக “விலகாதே…” காணொளிப் பாடல்

காதலர் தின வெளியீடாக “விலகாதே…” காணொளிப் பாடல்

1 minutes read

வினோத் இயக்கத்திலும் Dilu Entertainment தயாரிப்பிலும் வினோத்தின் பாடல் வரிகளில், வெற்றி சிந்துஜனின் இசை மற்றும் குரலில் “விலகாதே…” பாடல் வெளியாகவுள்ளது.

இந்த பாடலை குழுவினரோடு டிலாணியும் இணைந்து பாடியுள்ளார். பாடலுக்கு சொல்லிசையால் பங்களிப்பு செய்துள்ளார், இயக்குநர் வினோத்.

பாடலில் வரும் வயலின் இசையினை வேலதீபன் வழங்கியுள்ளார்.

பாடல் காட்சிகளில் டிலக்சன், கௌசல்யா, வினோத் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர்.

இந்த பாடல் காணொளியை VM Film Makers நிறுவனம் உருவாக்கியுள்ளது.

விதுசனது ஒளிப்பதிவிலும், சுதர்சனின் ஒலிக்கலவையிலும், சிந்துஜனின் படத்தொகுப்பு மற்றும் VFX தொழில்நுட்பத்திலும் உருவான இந்த பாடலின் உருவாக்கத்துக்கு உதவி இயக்குநராக ரகிதனும் இணை இயக்குநராக பவியாளனும் தயாரிப்பு முகாமையாளராக அனோஜனும் பணியாற்றியுள்ளனர்.

மேலும், ஒப்பனைப் பணிகளை சுகிதா செய்துள்ளார்.

மக்கள் தொடர்பாளராக சுதேசனும், டைட்டில் வடிவமைப்பாளராக விதுர்சனும், போஸ்டர் வடிவமைப்பாளராக மதுசனும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

ஈழத்து கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள இந்த காணொளிப் பாடல், காதலர் தினத்தை சிறப்பிக்க எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் VK Brothers வலையொளிப் பக்கத்தில் வெளியாகவுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.