செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஆர்.கே. சுரேஷின் ‘தென் மாவட்டம்’

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஆர்.கே. சுரேஷின் ‘தென் மாவட்டம்’

1 minutes read

மோசடி வழக்குகளில் சிக்கி இருக்கும் நடிகர் ஆர். கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிப்பதுடன் இயக்குநராகவும் அறிமுகமாகும் படத்திற்கு ‘தென் மாவட்டம்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தைப் பற்றிய சர்ச்சைகள் வெளியாக தொடங்கி இருக்கின்றன.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் இணையத்தில் வெளியான பிறகு யுவன் சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ‘தென் மாவட்டம் படத்திற்கு நான் இசையமைக்கவில்லை. இது தொடர்பாக யாரும் என்னுடன் பேசவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக இயக்குநரும், கதாநாயகனுமான ஆர். கே. சுரேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ‘யுவன் சங்கர் ராஜா சார்! நீங்கள் ஒரு திரைப்படத்திற்கும், நேரலையான இசை கச்சேரி ஒன்றுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்கள்’ என பதிலளித்திருக்கிறார்.

இதன் மூலம் ஆர் கே சுரேஷ் இயக்குநராக அறிமுகமாகும் ‘தென்மாவட்டம்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது படக் குழுவினராவ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஆர். கே. சுரேஷின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே ஆர். கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காடுவெட்டி’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.