நைஜீரியாவின் போர்னோ மாகணத்தின் தலைநகரான மைடூகுரி நகரத்தில் மோலாய் என்ற பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை நிகழ்த்திய தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோலாய் என்ற பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அங்கு உடலில் வெடிபொருட்களுடன் இருவர் வெடிகுண்டுகளை வெடிக்கசெய்ததில் 14 பேர் யாகினர். இந்த வெடி குண்டு தாக்குதலில் மசூதி கட்டிடம் முற்றிலும் இடிந்து சேதமானது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாரத்தில் அங்கு நடைபெறும் இரண்டவது தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு போகாகரம் தீவிரவாதிகள் இயக்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.