செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திருட்டு பாடம்’ பட டீசர்

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திருட்டு பாடம்’ பட டீசர்

1 minutes read

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர்களும், பிரபலமாகும் வளர்ந்து வரும் நடிகர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும்… தங்களது புதிய திரைப்படங்களை தமிழ் மொழியிலும் வெளியிடுவது என்பது தற்போது வணிக ரீதியில் கட்டாயமாகிவிட்டது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமான மற்றும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இதுபோன்ற திரைப்படங்களின் விளம்பரத்திற்கு தங்களாலான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகரான இந்திரா ராம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திருட்டு பாடம்’ எனும் திரைப்படத்தின் டீசரை ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு, வழக்கமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு இயக்குநர் நிகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திருட்டு பாடம்’ எனும் திரைப்படத்தில் இந்திரா ராம், பாயல் ராதாகிருஷ்ணா, ராஜீவ், சலீம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஒருவர் கூட இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதும், இதில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தமிழ் ரசிகர்களுக்கு புதுமுகம் என்பதும் கவனிக்கத்தக்கது. இப்படத்திற்கு கார்த்திக் கதை எழுதி, ஒளிப்பதிவு செய்துள்ளார். தாவ்ஜென்ட் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை நக்கினா நரேட்டிவ்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திரிநாதா ராவ் நக்கினா தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகளும், இறுதிக்கட்ட பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. புதையலை மையப்படுத்தி டார்க் காமெடி ஜேனரில் தயாராகி இருக்கிறது என்பதால் தமிழ் ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் கவரும் என அவதானிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.