செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

1 minutes read

தனித்துவமான நடிப்பை வழங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் பான் இந்திய நட்சத்திர நடிகையான நித்யா மேனன்- பெயரிடப்படாத தமிழ் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நித்யா மேனன், வினய் ராய், நவ்தீப், பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.‌

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ரொமான்டிக் காமெடியாகவும், ஃபேண்டஸியாகவும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையின் நாயகியான நித்யா மேனன் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் நடிக்கிறார்” என்றார்.

இதனிடையே நடிகை நித்யா மேனன் தமிழில் ‘சைக்கோ’, ‘திருச்சிற்றம்பலம்’ என தொடர் வெற்றி படங்களில் இடம்பெற்றிருப்பதால் அவர் நடிப்பில் தயாராகும் இந்தத் திரைப்படமும் வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.