செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..’

‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..’

1 minutes read

தமிழ் திரையிசை பாடல்களில் காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடலுக்கு இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் தனி மவுசு உண்டு.

அதிலும் பாடலின் தொடக்க வரிகள், சரணங்கள் காதல் உணர்வை நுட்பமாகவும், எளிமையாகவும் விவரித்திருந்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விடும்.

அந்த வகையில் கதிர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘மாணவன்’ எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இடம்பெற்ற ‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி.. ‘என்ற பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது.

Director S. L. S. Henryஇயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாணவன்’ எனும் திரைப்படத்தில் கதிர், இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவ லட்சுமி, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கல்லூரி பயிலும் பருவத்தில் மாணவருக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபார்ச்சூன் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. எம். தென்னிலவன் மற்றும் டி. டேனியல் கிறிஸ்டோபர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்துரு எழுத பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.

‘கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..’ என்ற பாடலின் பல்லவி முதல் முறை உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், பாடலை கேட்டு கேட்டு பாடும் போது ரசிக்கத் தோன்றுகிறது. மேலும் இந்தப் பாடலில் பாடல் வரிகள் தெளிவாகவும், துல்லியமாகவும் கேட்பதால் பாமர மக்களின் செவிகளுக்கு இனிய விருந்தை அளித்திருக்கிறது. இதன் காரணத்தினால் தான் இப்பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை  படைத்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.