செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் நவீன ஆயுதமேந்தும் யஷ்

மீண்டும் நவீன ஆயுதமேந்தும் யஷ்

1 minutes read

‘கே ஜி எஃப்’ படத்தின் மூலம் இந்திய திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த நட்சத்திர நடிகர் யஷ். இப்படம் வெளியாகி பல மாதங்களைக் கடந்த பின்னரும் யஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

புதிய படத்தில் நடிக்க ஊதியமாக இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தது தான் காரணம் என்கிறார்கள் திரையுலகினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாள நடிகையும், இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்ஸிக்’ எனும் திரைப்படத்தில் யஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பிறகு ‘டாக்ஸிக்’ படத்தை பற்றிய எந்த புதிய தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதனால் யஷ்ஷின் ரசிகர்கள் பொறுமை இழந்தனர். இந்நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லையர்’ஸ் டயஸ்’, ‘மூத்தோன் ‘ என சர்வதேச விருதுகள் பெற்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநரும், நடிகையுமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தயாராகும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கே வி என் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் இம்மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் கதையின் நாயகனான யஷ் ‘கே ஜி எஃப்’ பட பாணியில் மீண்டும் நவீன ஆயுதத்தை ஏந்தி தோன்றுகிறார்.

மேலும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தகவல்கள் வெளியாகி இருப்பதாலும், டாக்ஸிக் அவார்ட் படமல்ல.. அசால்ட் செய்யும் வழக்கமான அட்டாக் படம் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.