செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தியத்தலாவை கார் பந்தய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

தியத்தலாவை கார் பந்தய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

1 minutes read
தியத்தலாவை கார் பந்தயத் திடலில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2024 கார் பந்தயப் போட்டியில் பங்கேற்ற கார் ஒன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர், போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த 23 பேரும் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More