செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜின்னுக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு வரலாம்-இங்கிலாந்தில் ஜின்னுக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு வரலாம்-இங்கிலாந்தில்

ஜின்னுக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு வரலாம்-இங்கிலாந்தில் ஜின்னுக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு வரலாம்-இங்கிலாந்தில்

0 minutes read

இங்கிலாந்துவாசிகளின் விருப்பமான மதுபானங்களில் ஒன்றான் ஜின்னுக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு வரலாம் என தெரியவந்துள்ளது.

தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் தொடர்பாக ஆய்வுகளை நடத்திவரும் ‘பிளாண்ட்லைப்’ என்கிற குழு இங்கிலாந்தில் செயல்பட்டு வருகின்றது. ஸ்காட்லாந்தில் வளரும், ‘ஜுனிப்பர்’ தாவரங்கள் ஜின் என்கிற மதுபானத்தைத் தயாரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இந்தக் குழுவின் அறிக்கைப்படி இந்தத் தாவரங்கள் சமீபகாலமாக ஒருவகை நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புக்கு சுமார் எழுபத்து ஒன்பது சதவிகித ஜுனிப்பர் தாவரங்கள் உட்பட்டுள்ளன. இதனால், தாவரங்கள் முதுமையடைந்தும், பாதிப்படைந்தும் அல்லது முற்றிலுமாக அழிந்தும் போயுள்ளது.

தற்போது இங்கிலாந்தின் ஜின் தயாரிப்பாளர்கள் பலரும் வெளி நாடுகளிலிருந்து இந்த ஜுனிப்பர் தாவரங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். எனினும், இந்தத் தாவரங்களிடையே பரவிவரும் நோய் தடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என இந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.