செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நா.முத்துக்குமார் சர்வதேச எழுத்தாளர்கள் விழாவில் உரையாற்ற இருக்கிறார்நா.முத்துக்குமார் சர்வதேச எழுத்தாளர்கள் விழாவில் உரையாற்ற இருக்கிறார்

நா.முத்துக்குமார் சர்வதேச எழுத்தாளர்கள் விழாவில் உரையாற்ற இருக்கிறார்நா.முத்துக்குமார் சர்வதேச எழுத்தாளர்கள் விழாவில் உரையாற்ற இருக்கிறார்

1 minutes read

தமிழ் சினிமா உலகில் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். இவருடைய பாடல்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருடைய பாடல் வரிகளில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆனந்த யாழை…’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலுக்காக இவர் தேசிய விருது பெற்றார். மேலும் ‘சைவம்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகே…’ என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றார்.

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழுக்கு பெருமை சேர்ந்து வருகிறார். தற்போது மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சிங்கப்பூரில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர்கள் திருவிழாவில் நா.முத்துக்குமார் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

சிங்கப்பூரில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 9-ம் தேதி வரை சர்வதேச எழுத்தாளர்கள் திருவிழாவை சிங்கப்பூர் அரசு நடத்துகிறது. தமிழ், சீனம், மலாய், ஜப்பான், கொரியா, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழி எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் தமிழ் மொழி சார்பாக நா.முத்துக்குமார் கலந்து கொண்டு தமிழ் இலக்கியம் குறித்தும், கவிதைகளின் தற்கால போக்கு குறித்தும் உரையாற்ற இருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.