செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் – ஏ. ஆர். ரஹ்மான்- சன் பிக்சர்ஸ் கூட்டணி எடுக்கும் ‘ரூட்டு எடு ரூட்டு..’

தனுஷ் – ஏ. ஆர். ரஹ்மான்- சன் பிக்சர்ஸ் கூட்டணி எடுக்கும் ‘ரூட்டு எடு ரூட்டு..’

1 minutes read

தமிழ் திரையுலகின் வசூல் நாயகனான நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி இம்மாதம் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ராயன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரூட்டு எடு ரூட்டு..’  எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

இம்மாத இறுதியில் படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டிருப்பதால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளின் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ரூட்டு எடு ரூட்டு ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி, பாடி இருக்கிறார். றாப் இசை + வடசென்னை மண்ணை பிரதிபலிக்கும் வார்த்தைகள்+ மேலத்தேய தாள லயம்+ ஏ ஆர் ரஹ்மானின் மாயாஜாலம்+ பாடகர் அறிவின் குரல்+ இந்த கலவையில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் இளம் இசை ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More