நேபாளத்தின் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் புறப்பட்ட சவுர்யா ஏர்லைன்ஸ் விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.
அத்துடன், விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எனினும் விமானம் முழுவதும் எரிந்த நிலையில், விமானத்தில் இருந்த 19 பேரில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விமானத்தில் பயணித்த அனைவரும் விமான நிறுவன ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.