கடந்த மாதம் மெர்சிசைடில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12ஆவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிக்கி பெர்ரி என்ற நபர் ஜூலை 17 அன்று கிர்க்பியில் உள்ள குவாரிசைட் டிரைவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் திகதி கொலை மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவத்தில் கைதான சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மற்றொரு நபரான ஆடம் வில்லியம்ஸ், ஜூலை 26 அன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டதுடன், மேலும் நவம்பர் மாதம் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.