செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் சரும சுருக்கங்களைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்சரும சுருக்கங்களைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

சரும சுருக்கங்களைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்சரும சுருக்கங்களைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

1 minutes read

சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும். மேலும் சரும நிபுணர்கள், முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களைத் தடுக்க போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும் என்கின்றனர்.

தண்ணீர் குடிப்பதுடன், நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால், உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு முதுமையைத் தள்ளிப் போடலாம்.

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலோ அல்லது ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலோ, சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

கீரைகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பெர்ரிப் பழங்களில், அதுவும் ஸ்ட்ராபெர்ரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளதால், இவற்றை கிடைக்கும் போது உட்கொண்டு வந்தால், சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ளலாம். இந்த சிட்ரஸ் பழம் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தை வழங்கி, முதுமையைத் தள்ளிப் போடும்.

ப்ராக்கோலியை முடிந்தால் பச்சையாக அல்லது ஜூஸ் போட்டு அதிகாலையில் குடியுங்கள். இதனால் இது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. தர்பூசணிப் பழத்தை முடிந்தால், தினமும் ஒரு பௌல் வாங்கி சாப்பிடுங்கள்.

முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், முதுமையைத் தள்ளிப் போடலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.