’பிள்ளைகள் எமக்கான பெரு வரங்கள்; வரமான பிள்ளைகளின் வளர்ச்சியில் முன் பள்ளிப்பருவம் முக்கியமானது.மூளை வளர்ச்சி,மொழி வளர்ச்சி ,உணர் நிலைப் பக்குவம், சமூக நடத்தை என்பனவற்றின் அத்திவார காலம் இது. இதனை முன்பள்ளிகள் பக்குவமாய் வழங்குவது அவசியம். எங்கள் கல்வியமைப்பில் ‘ யார் பொறுப்பு’ என்ற வரையறை யில்லாமல் தொடரும் நிலை தாமதமின்றி மாற வேண்டும்.
இந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் புலத்து கல்வியாளர் அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் மேலான தலைமைத்துவ வழிகாட்டலில் செயற்பட்டுவரும் திருநெல்வேலி ’கிட்ஸ் பாக்’ பணி பாராட்டுக்குரியது.
முன்பள்ளியை பக்குவமாய் நிர்வகிக்கும் இயக்குநர் ஆசிரியர் பால முகுந்தன் , ஆக்கத்திறனான கலை நிகழ்ச்சிகளை எமதாகிய ஆசிரியர் கள்,மாணவர்கள்,ஊக்கமுடன் அரவணைக்கும் பெற்றோர் – அனைவரை யும் பாராட்டுகின்றேன்.
நியம பாடசாலை அமைப்புக்குள் நுழையும் பிள்ளைகள், எதிர்காலத்தில் எங்கள் கல்விக்கட்டமைப்பின் பரீட்சை மைய அழுத்தங்களுக்குள் தம் ஆளுமைகளைத் தொலைத்து விடாதபடி அவர்களை காக்கும் பொறுப் பினை பெற்றோர்-ஆசிரியர்-சமூகம் இணைந்து நிலை நாட்டுவது இன்றியமையாதது’
என, ’கிட் ஸ் பாக்’ கிலிருந்து பாடசாலை செல்லப்போகும் பிள்ளைகளின் பிரியாவிடை கலை விழா நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இணை பிரதம விருந்தினரராக கலந்து சிறப்பித்த கலாநிதி கௌரி சண்முக லிங்கன் மாணவர்களுக்கான பதக்கங்களைச் சூட்டி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.