செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கலவரத்தைத் தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! – பிரதமர் திட்டவட்டம்

கலவரத்தைத் தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! – பிரதமர் திட்டவட்டம்

1 minutes read
“இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு – வன்முறைகளுக்கு – கலவரங்களுக்கு இடமேயில்லை.”

– இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“இங்கு இன, மத வன்முறைகளை – கலவரங்களை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள்.” – என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More