2
தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று நடைபெற்றது.
யாழ். இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு ஆரம்பமானது.
இதில் தமிழ்த் தேசிய பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் யாழ். மாவட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.