காஸாவிற்குள் சென்ற உதவிப் பொருள்கள் மக்களைச் சென்று சேர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 11 வாரமாக காஸாவுக்கு உதவிப்பொருள்கள் செல்வதில் இஸ்ரேலினால் தடைகள் காணப்பட்டன.
எனினும், அந்தத் தடையை 3 நாளுக்கு முன்னர் இஸ்ரேல் நீக்கியுள்ளது.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இங்கிலாந்து நிறுத்துகிறது!
மொத்தம் 100 லொரிகளில் உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன. அவற்றில் 90 லொரிகளில் சென்ற பொருள்களை விநியோகம் செய்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
காஸா மக்களுக்குப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் அவை கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன.
காஸாவில் உள்ள 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உணவு நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.