செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்த வருடத்தில் முதல் கணக்காக ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார் தனுஷ்இந்த வருடத்தில் முதல் கணக்காக ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார் தனுஷ்

இந்த வருடத்தில் முதல் கணக்காக ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார் தனுஷ்இந்த வருடத்தில் முதல் கணக்காக ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார் தனுஷ்

0 minutes read

தனுஷ் சொந்தமாக ‘வுண்டார்பார் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இவருடைய நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வெற்றியை தேடித் தந்துள்ளது.

கடந்த வருடம் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த ‘காக்கா முட்டை’, ‘நானும் ரௌடிதான்’, ‘தங்கமகன்’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த வருடத்தில் தனது நிறுவனத்தின் முதல் கணக்காக ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அமலாபால் ஹீரோயினாக நடிக்கிறார். சமுத்திரகனி, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஸ்வினி ஐயர் என்ற பெண் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்தியில் இவர் இயக்கிய ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற படமே ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.