செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தன் தாயை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி படுகொலைதன் தாயை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி படுகொலை

தன் தாயை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி படுகொலைதன் தாயை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி படுகொலை

1 minutes read

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன், தனனை அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறும்படி கூறிய தாயை, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரியா-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க கூட்டுப்படை ஒருபுறம் தாக்குதலை தீவிரப்படுத்தினாலும், மறுபுறம் தீவிரவாதிகள் தங்கள் கோரமுகத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி அதிர்ச்சி அளித்து வருகின்றனர். அதுபோன்ற சம்பவம் தற்போது ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ராக்கா நகரில் நடந்துள்ளது.

ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள தீவிரவாதி, நேற்று ராக்கா நகரில் தன் தாயை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி படுகொலை செய்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

“அல் தபஹா நகரில் இருந்து ராக்கா நகருக்கு வந்து பணியாற்றி வரும் அந்தப் பெண், தன் மகனை ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து விலகுமாறு கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையில் இயங்கும் கூட்டுப்படை, அனைத்து ஐ.எஸ் தீவிரவாதிகளையும் கொன்றுவிடும் எனவும் அவர் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஐ.எஸ். இயக்கத்தினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். பின்னர் ராக்கா நகரில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை மகனே வெட்டி கொலை செய்துள்ளான்“ என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.