செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸில் கடல் பாதுகாப்பு உச்சிமாநாடு; 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

பிரான்ஸில் கடல் பாதுகாப்பு உச்சிமாநாடு; 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

0 minutes read

கடல் பாதுகாப்பு உச்சிமாநாடு பிரான்ஸில் நடைபெறுகின்றது. இதில் சுமார் 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பெருங்கடல்கள் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கவனம் செலுத்துகின்றது. அதன்படி, குறித்த கடல் பாதுகாப்பு உச்சிமாநாடு பிரான்ஸில் நடைபெறுகின்றது.

அளவுக்கு அதிகமாக மீன்பிடிப்பது, காலநிலை மாற்றம் மற்றும் மாசு போன்றவற்றால் பெருங்கடல்கள் கடுமையான அச்சுறுத்தலை சந்திக்கின்றன.

அதனை நெருக்கடி-நிலை என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.

பிரான்ஸ், நீஸ் நகரில் மாநாடுக்காக கூடும் உலகத் தலைவர்கள், பெருங்கடல்களைக் கவனித்துக்கொள்ள நிதி ஆதரவும் பாதுகாப்பும் வழங்க ஒத்துழைப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.

பெருங்கடல்களை நம்பியிருப்போரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்தக் கடல் பாதுகாப்பு உச்சிமாநாட்டை முன்னிட்டு, ஃபிரான்ஸில் அமைதிப் பேரணிகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 5,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.