செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு நாடு திரும்ப முடியாமல் இஸ்ரேலில் சிக்கியுள்ள 60,000 இங்கிலாந்து பிரஜைகள்!

நாடு திரும்ப முடியாமல் இஸ்ரேலில் சிக்கியுள்ள 60,000 இங்கிலாந்து பிரஜைகள்!

1 minutes read

ஈரானின் திடீர் வான்வெளித் தாக்குதல்களால் பயணிகள் விமானங்களுக்கான அனுமதிகளை இஸ்ரேல் முற்றாக நிறுத்தியுள்ளது.

இதனால் நாடு திரும்ப முடியாமல் பல வெளிநாட்டவர்கள் உட்பட 60,000 இங்கிலாந்து பிரஜைகள் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரஜைகளை மீட்பதற்காக இங்கிலாந்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகள், ஈரான் – இஸ்ரேலில் மோதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இங்கிலாந்து மக்களின் பாதுகாப்பு எங்களின் முன்னுரிமையாக உள்ளது என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி : இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

6 நாட்கள் கிறிஸ்தவ யாத்திரைக்காக கடந்த 9ஆம் திகதி தான் ஜெருசலேம் வந்ததாக தெரிவிக்கும் ஜேம்ஸ் ஈடன் எனும் இங்கிலாந்து பிரஜை, தற்போது விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டடுள்ளமையால் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

நியூகேஸில்-அப்-டைனைச் சேர்ந்த 72 வயதான அவர், இங்கிலாந்துக்குத் திரும்ப விமானம் மூலம் எகிப்துக்குச் செல்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஆனால், FCDO “எகிப்திலிருந்து வெளியேற எனக்கும் உதவப் போவதில்லை” என்றும் PA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

FCDO செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இஸ்ரேலில் உள்ள ஒரு இங்கிலாந்து நபருடன் தொடர்பில் இருப்பதாக” கூறினார், மேலும் “இங்கழலாந்து நாட்டினரை 24/7 ஆதரிக்கத் தயாராக இருப்பதாக” கூறினார். மேலும், பிராந்தியத்தில் உள்ள எவரையும் “FCDO பயண ஆலோசனைக்கான புதுப்பிப்புகளைக் கண்காணிக்க” வலியுறுத்தினார்.

இதேவேளை, எகிப்தின் சில பகுதிகளுக்கு பயணம் செய்வதை இங்கிலாந்து குடிமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் FCDO அறிவுறுத்துகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.