பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவி பிரிஜிடுடன் மூன்று நாட்கள் அரச சுற்றுப் பயணமாக இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது சிறப்பு அதிதியாக அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றினார்.
அவர் தனது உரையில் பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறினாலும் பாதுகாப்பு முதலான முக்கிய விடயங்களில் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இங்கிலாந்தை தனித்து விட முடியாது என்றும் அவர் இதன்போது திட்டவட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், தடையில்லா இயக்கத் திட்டம் இல்லாவிட்டால், இரு தரப்பும் பிரிய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இளைஞர்கள் அந்நியர்கள் போல் மாறிவிட வாய்ப்புள்ளதாகவும், அதை சரி செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காமல் குற்றவாளிகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதை அனுமதிக்கமுடியாது எனறும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோத புலம்பெயர்தலை மனிதாபிமானத்துடன் எதிர்கொள்வதில் இங்கிலாந்தும் பிரான்ஸும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய கடமை என்றும் அவர் சுட்டிக்காகட்டினார்.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்தும் பிரான்ஸும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன
அதேவேளை, உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி எடுத்துள்ளன. அது, உக்ரைனை ஐரோப்பியர்கள் கைவிடமாட்டார்கள் என்பதற்கான சமிக்ஞை என்றும் இம்மானுவேல் மக்ரான் கூறினார்.