செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஆடிக் கூழ் இதனை | நதுநசி

ஆடிக் கூழ் இதனை | நதுநசி

0 minutes read

பாடிப் பாடல் ஆடி
அன்பால் கூட இனி
போடி வாடி பேசல்
ஆடி விடுவோம் தேடி.

நாடிக் கூடி மகிழும்
வாடிக் கடலோர வீடு
அதுபோலொரு நலன்
ஊர் வீட்டிலும் பாடு.

ஆடிக் கூழ் இதனை
தந்து போகிற – அந்த
பண்பாடு தொலைத்து
நெடுங்காலம் ஆகிறது.

சொந்தம் நாடிக்கூடி
இன்பம் பொங்க
கதைகள் பேசி மகிழும்
வாழ்வை இனி மீட்போம்.

தேவைகள் குறைத்து
உழைப்பைச் சேர்த்து
ஓடிச் சோரும் நேரம்
கொஞ்சம் மிச்சம் வை.

அந்த மிச்ச நேரம்
வரலாற்றை மீட்டி
மூட்டி விட்ட கொடும்
போரை வென்று விட

நாளை தானும் நமக்கு
ஒரு நாடு மலர
இன்றே தேவைகள் தேடி
சொல்லி வைத்து விடு.

ஆடிக்கூழ் காய்ச்சி
ஆக்கினைகள் சொல்லி
எதிர் நின்று வெல்ல
வழிகள் சமைக்க உறுதி.

உனக்குள் கொண்டால்
மற்றாரும் உற்றாரும்
கண்முன் வந்திட – இல்லை
அவர் முன் நீ சென்றிட.

உன் விழிகள் பேசும்
உள்மன உணர்வை
வார்த்தைகள் விடுத்து
மௌனப் பார்வை ஒன்றால்.

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.