உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) செயல் கொஞ்சம் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருக்கிறார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்தை ஸெலன்ஸ்கி படித்துப் பார்க்கவில்லை என்று டிரம்ப் குறைப்பட்டுக் கொண்டார்.
அத்துடன், அமைதித் திட்டத்தின் நிபந்தனைகளை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : இலண்டனில் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி
வார இறுதியில் உக்ரேனிய அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் கைகூடும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கத் தூதர் கித் கெலொக் (Keith Kellogg) தெரிவித்தார்.
இருப்பினும், நெடுநாட்களாக மோதல் தொடரும் டொன்பாஸ் (Donbas) வட்டாரம், ஸெபொரிஸியா (Zaporizhzhia) அணுமின் நிலையம் ஆகியவற்றில் இரண்டு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் திட்டம் ஏற்புடையதாக இருப்பதாய் ரஷ்யா சொல்கிறது.