1
சிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய கடந்த ஐந்து மாதங்களில் 1,733 பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், “”ரஷியத் தாக்குதல் தொடங்கிய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முதல் சிரியாவில் 1,733 பொதுமக்கள் உள்பட 4,408 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தது.