செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடகொரியா ஏவுகணை சோதனை -தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்வடகொரியா ஏவுகணை சோதனை -தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

வடகொரியா ஏவுகணை சோதனை -தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்வடகொரியா ஏவுகணை சோதனை -தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

1 minutes read

வடகொரியா மீது, ஐ.நா., கடுமையான பொருளாதார தடை விதித்த சில மணிநேரத்திற்குள்ளாக, அந்நாடு, குறைந்த துாரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது.

ஹைட்ரஜன் குண்டு சோதனையை சமீபத்தில் நடத்தி முடித்த, வடகொரியா, அதனைத் தொடர்ந்து, நீண்டதுார இலக்கை தாக்கும் ராக்கெட்டை ஏவியது. இதற்கு, உலக நாடுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்தன.

அதன்படி, வடகொரியா மீது, 20 ஆண்டுகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு சபையில் நேற்று நிறைவேறியது. இந்த தீர்மானம் நிறைவேறிய சில மணிநேரத்திற்குள், வடகொரியா, மீண்டும் ஆயுத சோதனையில் இறங்கியது.

அந்நாட்டின் கிழக்கு கடலோரா பகுதியில், குறுகிய துாரம் சென்று தாக்கும், ஆறு, ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்து பார்த்தது. எனினும், இதனை ஏவுகணை என்று உறுதிபடுத்த முடியவில்லை.

‘ஏவுகணை, ராக்கெட், குண்டு கள், இதில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்’ என தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த, ‘அடாவடி’ நடவடிக்கைக்கு, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.